விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி

விஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. 7சி என்டேர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் அம்மா நாராயண நிறுவனத்தின் தயாரிப்பில், ஆறுமுக குமார் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துஇருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி 8 விதமான வேடங்களில் நடித்து இருக்கிறார் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வருகிற ஜனவரி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top