பேஸ்புக் தளத்தில் பேஸ்புக் டேக்: விரைவில் புதிய ஷார்கட்

 

பேஸ்புக் தளத்தில் கமெண்ட்களில் நண்பர்களை டேக் (tag) செய்ய புதிய ஷார்கட் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பேஸ்புக் பதிவுகளின் கமெண்ட்களில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கமெண்ட்களில் நண்பர்களின் பெயரை டைப் செய்யும் முன் @ எனும் குறியீடை டைப் செய்து டேக் செய்யும் படி வழங்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய தகவல்களின் படி பேஸ்புக் கமெண்ட்களில் மென்ஷன் ஏ ஃபிரெண்ட் என்ற பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கிளிக் செய்தால் பயனர்களின் நண்பர்கள் பட்டியல் தோன்றும், இதை ஸ்கிரால் செய்து டேக் செய்ய முடியுமாம்.
முழுமையான பெயர்களை டைப் செய்து அதன்பின் பரிந்துரைகளின் படி டேக் செய்வதை தவிர்த்து பிரத்யேக பட்டன் மூலம் டேக் செய்வது பயனுள்ளதாகவும், மிக எளிமையாகவும் இருக்கும். இதேபோன்ற அம்சம் பேஸ்புக் பதிவிடும் போது வழங்கப்பட்டுள்ள நிலையில், கமெண்ட்களில் டேக் செய்யவும் வழங்கப்பட உள்ளது.

தற்சமயம் இந்த அம்சம் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் உண்மையில் வழங்கப்படுமா என்பதும் கேள்வி குறியாகவே உள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top