ஜல்லிக்கட்டு: புதுச்சேரி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேறியது

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடைகளை நீக்கி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது.

இதேபோல் புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி, இன்று புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த மசோதாவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்தார். அது எதிர்ப்பின்றி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இனி, இந்த சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் சட்ட வடிவம் பெறும்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top