இந்தியா-இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை அணி பேட்டிங் தேர்வு

நாக்பூர்:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி: முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரகானே, ரோகித் சர்மா, சகா(விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா.

இலங்கை அணி: சமரவிக்ரமா, குணரத்னே, திரிமன்னே, மேத்யூஸ், சண்டிமல் (கேப்டன்), டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனகா, பெரேரா, ஹெராத், லக்மல், லகிரு காமேஜ்.

கருணாரத்னே, சமரவிக்ரமே துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஆடுகளம்போன்று தெரிகிறது. எனவே, அதிக ரன்களை குவிக்க முயற்சி செய்வோம் என இலங்கை கேப்டன் சண்டிமல் கூறினார். ஆடுகளத்தில் புற்கள் அதிகம் இன்றி, சில இடங்களில் வெடிப்பு காணப்படுவதால் முதல் செசனில் விக்கெட் வீழ்த்த முடியும் என கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top