அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் வருகைக்கு பிறகு வடகொரியாவுடன் விமான போக்குவரத்தை துண்டித்த சீனா

பீஜிங்:

வடகொரியாவும், தென் கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. அமெரிக்காவிற்கு ஆதரவாக தென் கொரியா ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் தனது பொருளாதார ஆதிக்கத்தை அமெரிக்கா நடத்தி வருகிறது.

இதனால் அமெரிக்காவுடன் வடகொரியா மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. மேலும் கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது.

எனவே, வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார். சீனா ஆசியாவில் பொருளாதார ரீதியில் பலம் பெற்று வருகிறது, எது அமெரிக்காவிற்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் பொருளாதாரத்தை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றன. இவர்களின் இந்த செயலை தொடர்ந்து வட கொரியா எதிர்த்து வருகிறது.

மேலும் வடகொரியாவின் செயல் அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கையை பாதிக்க கூடும் என்பதால் அதுகுறித்து ஆசியா நாடுகளிடம் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படும் வடகொரியாவை முடக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இந்த நிலையில் சென்ற வரம் நடைபெற்ற அமெரிக்காவின் அதிபர் ட்ரம்பின் ஆசியா பொருளாதார பயணத்தில் சீனாவும், அமெரிக்காவும் 16 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டன.

தற்போது சீனா தனது சிறப்பு தூதரை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தது. சிறப்பு தூதர் சாங்டோ தலைமையிலான குழுவினர் வட கொரியாவுக்கு சென்று அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனாலும், வடகொரியா தனது கொள்கையை கைவிடவில்லை. அமெரிக்கா தான் உலகில் தீவிரவாதிகளையே உருவாக்குகிறது என்று வடகொரியா கூறி இருக்கிறது.

இந்த நிலையில் திடீரென சீனா வட கொரியாவுடனான விமான போக்குவரத்தை துண்டித்துள்ளது.

சீனாவின் பேச்சுக்கு கட்டுப்பட வடகொரியா மறுப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால், சீனா இது சம்பந்தமாக கூறும்போது, வடகொரியாவுக்கு செல்லும் விமானத்தில் போதிய பயணிகள் வரவில்லை. எனவே, வர்த்தக ரீதியாக பாதிப்பு ஏற்படுவதால் போக்குவரத்த நிறுத்தி விட்டோம். இதில், அரசியல் காரணங்கள் இல்லை என்று கூறி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top