பயங்கரவாதத்துக்கும் வடகொரியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் கண்டனம்

சியோல்,

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது.

வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க, அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் முற்றி, போர் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது.

தொடர்ந்து அமெரிக்காவை கொரியா தீபகற்பத்தில் வெளியேற ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது, வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்று அறிந்த நிலையில், அமெரிக்கா வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்தது, அதுமட்டும் இன்றி ஐ.நா. மற்றும் உலக நாடுகளை வடகொரியா மீது பொருளாதார தடையை விதிக்க வலியுறுத்தியது. இதை தொடர்ந்து ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்தது.

இந்த பொருத்தர தடை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா மீது மேலும் சில புதிய தடைகளை விதிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். அவரது இந்த முடிவை ஜப்பான் வரவேற்றது.

அமெரிக்காவின் அறிவிப்பால் கடும் எரிச்சல் அடைந்துள்ள வடகொரியா, அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து வடகொரியா அதிகாரி கூறுகையில், பயங்கரவாதத்துக்கும் வடகொரியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்கா அறிவித்தது பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அமெரிக்காவின் இந்த அறிவிப்பானது, வடகொரியா தன்னை பாதுகாத்துக்கொள்ள மேலும் தீவிரமாக செயல்பட வேன்டும் என்பதை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சென்ற வரம் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அமெரிக்காவின் டிரம்ப் கலந்து கொண்டார் இந்த மாநாடு முடிந்த பிறகு வடகொரியா மீதான பொருளாதார தடையை விதித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top