பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து 13 பேர் பலி

லூதியானா,

பஞ்சாப் மாநிலம் லூதியனாவில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று திடிரென மளமளவென இடிந்து விழுந்ததில் 13 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமீர்ந்தர் சிங் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார் மேலும் பட்டியாலா பிரதேச ஆணையாளரை ஒரு விரிவான விசாரணையை நடத்தவும், கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அறிவித்தார்.

இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top