பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு : இடதுசாரி கட்சிகள்

புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் இருந்த மிகப்பழமையான பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கரசேவகர்களால் கூறப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய இயக்கங்கள் இதே நாளில் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்துவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 6 இடதுசாரி இயக்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பான அறிக்கையில், டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வளரும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதியுடன் போராடவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினமான அன்று, பசுபாதுகாப்பு என்ற பெயரில் தலித்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top