மனங்கள் இணையவில்லை; தொண்டர்களின் உணர்வை எதிரொலித்துள்ளேன் தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில்

சென்னை,

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன் அவராது பேஸ்புக்கில், ‘ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றுள்ளன. ‘மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என்று பதிவிட்டுருந்தார். அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பதிவு காணப்பட்டது.

மைத்ரேயனின் பேஸ்புக் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என தம்பிதுரை எம்.பி. நேற்று கூறினார்.

இந்நிலையில், நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. அது அடிமட்ட தொண்டர்களின் கருத்து என மைத்ரேயன் எம்.பி. இன்று கூறியுள்ளார். அடிமட்ட தொண்டர்களின் உணர்வையே நான் எதிரொலித்துள்ளேன் என்றும் முகநூல் வழியே அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று பேட்டி அளித்த பொன்னையன், இரு அணிகளின் மனங்கள் இணைந்தே உள்ளன என்று தெரிவித்தார். தொண்டர்களின் மனமும் ஒன்றாகத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். அனைவரும் ஒன்றாக இணைந்தே இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top