ஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப் மகள்

நகரி:

சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு வருகிற 28-ந்தேதி ஐதராபத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். ஐதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார்.

இவாங்கா டிரம்ப் வருகையையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதல்-மந்திரி சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஓட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தான் ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.

இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் ரகசிய போலீஸ் குழு பல தடவை ஐதராபாத் வந்து ஓட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட் பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அவர் வரலாற்று சிறப்புமிக்க கோல்கோண்டா கோட்டை பகுதிக்கு சென்று ஷாப்பிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் வருகையையொட்டி ஐதராபாத் ரோட்டில் நடமாடும் பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தனது பொருளாதாரத்தை பெரிதுபடுத்த சென்ற வரம் ஆசியா முழுவதும் பயணம் மேற்கொண்ட டிரம்ப் சீனா உடன் 16 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது. சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அமெரிக்காவை பாதிக்க கூடாது என்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆசியாவின் பல நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதாரம் அதிகம் செய்து வருகிறது.

இந்தியாவில் அமெரிக்காவின் பொருளாதாரமே அதிகம் செலுத்தி வருகிறது. மேலும் த்ரும்பின் ஆசியா வருகைக்கு பிறகு இந்தியாவில் நாடாகும் இந்த சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற இருக்கிறது இதில் த்ரும்பின் மகள் கலந்து கொள்கிறார். எது அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top