`அறம்’ பட இயக்குனர் கோபிக்கு கொலை மிரட்டல்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள ‘அறம்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சமூகத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அரசு எப்படி அணுகுகிறது என்பது குறித்து கூறுகிறது இந்த படம். இந்த படம் குறித்து இயக்குனர் கோபி நயினார் கூறியதாவது:-

ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை டி.வி.யில் பார்த்து அறம் கதையை எழுதினேன். கதை சொன்னதும் நயன்தாராவே இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதனால் வசனங்களை கொஞ்சம் வீரியமாக எழுதினேன். இந்த படத்தை நிறைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள்.

ஆனால் சிலர் நள்ளிரவில் போன் செய்து என்னையும், என் குடும்ப பெண்களையும் மிரட்டுகிறார்கள். தவறான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என்னை சாடுகிறார்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக அமர்ந்து விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

தொடர்ந்து நமது பிரச்சினைகளுக்கான வி‌ஷயங்களைத்தான் படமாக்கப்போகிறேன். ஒருவேளை எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காவிட்டாலும் வாட்ச்மேன் வேலைக்கு போவேனே தவிர, மசாலா கதைகளை இயக்க மாட்டேன்.

இவ்வாறு வேதனையுடன் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top