‘ஓட்டளித்தால் தான் நீங்கள் நிம்மதியாக வாழலாம்’;உபி யில் முஸ்லிம்களை மிரட்டிய பாஜக தலைவர்

என் மனைவிக்கு ஓட்டளிக்கவும் இல்லாவிட்டால் பிரச்சினை வரும் என்று  உ.பி.யில் முஸ்லிம்களை மிரட்டினார்  பாஜக தலைவர் ரஞ்சித் குமார் ஸ்ரீவஸ்தவா

 

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி உள்ளது. இவர் பதவியேற்ற பிறகு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் முதல்முறையாக நடக்கிறது. தற்போது பாரபங்கியில் பாஜக கவுன்சிலராக இருப்பவர் ரஞ்சித் குமார் ஸ்ரீவஸ்தவா. இந்த முறை பாரபங்கி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அதனால் ரஞ்சித் குமாரின் மனைவி சாஷி, பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரபங்கியில் ரஞ்சித் பிரச்சாரம் செய்தார். அப்போது மேடையில் உ.பி. அமைச்சர்கள் தாராசிங் சவுகான், ரமாபதி சாஸ்திரி ஆகிய 2 பேர் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் முஸ்லிம்களை மிரட்டும் வகையில் ரஞ்சித் பேசியதாவது:

 

இது சமாஜ்வாதி கட்சி ஆட்சியல்ல. இங்கு உங்கள் தலைவர்கள் யாரும் உதவி செய்ய மாட்டார்கள். சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் போன்ற எல்லா பணிகளையும் உள்ளாட்சி அமைப்புதான் செய்ய வேண்டும். சமாஜ்வாதி கட்சி உங்களை காப்பாற்றாது. பாஜக ஆட்சியில் உள்ளது. இதற்கு முன்னர் நீங்கள் சந்திக்காத பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். எனவே, நான் முஸ்லிம்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் பிச்சை கேட்கவில்லை. நீங்கள் ஓட்டளித்தால், நிம்மதியாக வாழலாம். இல்லாவிட்டால் என்ன பிரச்சினைகள் என்று புரிந்துகொள்வீர்கள்.

 

இவ்வாறு ரஞ்சித் குமார் பேசினார். இவருடைய பேச்சு உ.பி.யில் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க அமைச்சர் தாராசிங் சவுகான் மறுத்துவிட்டார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top