இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

 

கொல்கத்தா ஈடன்கார்டனில் இந்தியா – இலங்கை கிரிக்கெட். மழை ஆக்கிரமித்துக்கொண்டது!

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 தின ஆட்டங்கள் பெரும்பாலானவற்றை மழையே ஆக்கிரமித்துக்கொண்டது. 2-வது நாள் உணவு இடைவேளை வரை , 32.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.

 

அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாமல் போய் விட்டது. புஜாரா 47 ரன்களுடனும் (102 பந்து, 9 பவுண்டரி), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 6 ரன்னுடனும் (22 பந்து) களத்தில் நின்றனர். இரண்டாம் நாளில் வெறும் 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இரு நாட்களையும் சேர்த்து மொத்தம் 147 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளன.

 

3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். தாக்கு பிடித்து ஆடிய புஜாரா அரைசதம் அடித்தார். 117 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இருந்த போது, கம்பேஜ் பந்தில் புஜாரா போல்டு ஆனார். இதன்பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தது.  59.3 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.  இலங்கை அணி தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளையும், கம்பேஜ், ஷன்கா,பெரேர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைற்றினர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top