‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு மறு தணிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

 

உச்ச நீதிமன்றத்தில் ‘பத்மாவதி’’ திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

கடந்த ஜனவரியில் பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.

 

இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்தைத் வெளியிட தடை கோரி, 11 பேர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.

 

இந்நிலையில், பத்மாவதி திரைபடத்திற்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எல்.எல். சர்மா என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், பத்மாவதி திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top