கொல்கத்தாவில் நாளை இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட்

கொல்கத்தா:

சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் எந்த போட்டியையும் இழக்காமல் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது.

இலங்கையை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கிலும், வெஸ்ட்இண்டீசை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்காளதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) மற்றும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கிலும் தொடர்ச்சியாக வென்றது.

தற்போது இலங்கையை 3-வது முறையாக வீழ்த்தி தொடர்ச்சியாக 9-வது டெஸ்ட் தொடரை வெல்லும் வேட்கையில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.

இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவை வலுவுடன் எதிர் கொள்கிறது.

நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ராகுல்.

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), கருணாரத்னே, சமரவிக்ரமசிங்கே, மேத்யூஸ், டிக்வெலா, திரிமானே, ஹெராத், தகன் ‌ஷன்கா, விஷ்வா பெர்னாண்டோ, ரோகன் சில்வா, லக்மல், தில்ருவன் பெனரரா, லகிரு கமாகே, சன்டகன், தனஞ்செயன் சில்வா.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top