த.பெ.தி.க ராமகிருஷ்ணன் தலைமையில் கோவையில் ஆளுநர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

 

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இல்லாமல்,,இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் என்ற பதவியை வைத்துக்கொண்டு தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் ஆளுநர்

 

தமிழக அரசு அலுவலர்களை ,ஆட்சியாளர்களை நேரில் சந்தித்து அதிகாரம் செய்யும் நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபட்டதை கண்டித்து  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பொதுச் செயலாளர் கோவை.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .

 

தமிழகத்தின்  அதிமுக அரசு பாஜக வின் பினாமியாகத்தான்  செயல்படுகிறது என்று அரசியல் விமர்ச்சகர்கள் சொல்லிவருவது உண்மை என்று நிருபிக்கும் வகையிலே நேற்று  தமிழக கவர்னர் கோவையிலே தன்னிச்சையாக அதிகாரிகளை சந்தித்து இருப்பது அமைந்திருக்கிறது

மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஆளுநர்கள். ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருந்தபோதும், ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது இல்லை. குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது அவரது கடமை.அவ்வளவுதான்

 

அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஆளுநர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால், அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது கிடையாது. நேரடியாக உத்தரவும் பிறப்பிப்பது இல்லை.அப்படி செய்தால் அது சட்டத்தின் படி தவறானது

 

ஆனால், சமீபத்தில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் இன்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் வெ. ஆறுச்சாமி, மற்றும் ஆனந்த், கோபால், மற்றும் பலர் எதிர்ப்புத் தெரிவித்து  ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top