தென்கொரியாவை தாக்கிய நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவு

சியோல்:

தென்கொரியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு கரையோரம் இருக்கும் போஹாங் நகரின் வடக்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் பொது மக்களுக்கு எந்த காயங்களோ அல்லது பெரும் சேதமோ ஏற்படவில்லை என்று கொரியா வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போஹங்கிற்கு அருகே உள்ள ஜியோங்ஜூ என்ற புராதன நகரத்திற்கு அருகில் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக ஏற்ப்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு இதுவே தென் கொரியாவின் மிகப்பெரிய நிலநடுக்கம் என்று கொரியா வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா அண்டை நாடான ஜப்பான் போலல்லாமல் ஒப்பீட்டளவில் சிறிய நில அதிர்வு நடவடிக்கைகளை கொண்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top