பேரறிவாளன் விடுதலை; மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடெல்லி:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு, 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை குயில்தாசன் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கித்தந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், எனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டதுடன் இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பேரறிவாளன் உள்பட 7 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவுவிட்டது . அதை மத்திய அரசு தடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top