பிரபல நடிகரின் ஸ்டூடியோவில் தீடிரென தீ விபத்து

ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் அவை சார்ந்த பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த செட் ஒன்றில் தீடிரென தீப்பிடித்தது. தீ மிக வேகமாக பரவிய நிலையில், தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top