காஸ்மீர் முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா மீது தேசத்துரோக வழக்கு;பீகார் நீதிமன்றம் உத்தரவு

 

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என கருத்து கூறிய பரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா சமீபத்தில் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

அவரது இந்த கருத்துக்கு மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், பீகாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், பரூக் அப்துல்லா கூறிய கருத்து குறித்து வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். இதையடுத்து, பரூக் அப்துல்லாவுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top