ஹிந்தி சினிமாவில் அறிமுமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி. இவர் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.

மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சாய் ராட்’. இப்படத்தை இயக்கியவர் நாகராஜ் மஞ்சுளே, இந்த படத்திற்காக இந்தியா முழுவதும் இவருக்கு பாராட்டுகள் குவிந்தது கரணம் இப்படம் இந்த நூற்றாண்டிலும் இந்தியாவில் சாதிய வன்முறைகள் நிகழ்வதை தோல் உரித்து கட்டிய படம். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் மிக பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் ஜான்வி நடிக்க இருக்கிறார். இதற்கு ஸ்ரீதேவி அனுமதி வழங்கி உள்ளார்.

இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீதேவி மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தி திரை உலகில் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அவர் நடிக்க வருவதற்கு இந்தி பட ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தனது மகள் ஜான்வி சினிமாவில் நடிப்பது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது:-

நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள். அவள் என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள்.

மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தி இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவே திறமையாக செயல்படுவாள்.

சினிமாவில் நடிப்பது பற்றி அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள். இதை நான் உறுதியாக சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top