ஹிந்தியில் பேசச்சொல்லி தமிழக மீனவர்கள் மீது இந்திய கப்பற்படை துப்பாக்கிச்சூடு;

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அந்தோணிராஜ் சக மீனவர்களுடன் தனது படகில் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் திடீர் என மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகிய மீனவர்கள் காயமடைந்தனர். இந்திய கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்படுவது இது இரண்டாவது முறையாகும். தான் சொந்த நாட்டு மீனவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்தியுள்ள இந்திய கடற்படையின் செயல் தமிழக மீனவர்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து படகை சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் தமிழில் பேசக்கூடாது என்று கூறி ஹிந்தியில் பேச வற்புறுத்தியதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இந்திய கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதற்கு எந்த ஒரு விளக்கமோ, கண்டனமோ மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இந்தியா அரசின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து எந்த கண்டனமும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதலில் நடத்தி வருவது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top