நர்சிங் கலந்தாய்வில் குளறுபடி; கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: அண்ணா சாலையில் மாணவிகள் சாலை மறியல்

 

நர்சிங் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுத்ததால் மாணவிகள், பெற்றோர் அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

2017-18 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நர்சிங் டிப்ளமோ கலந்தாய்வு நவ.11 தொடங்கி நவ.13 வரை நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 2000 நர்சிங் இடங்களை நிரப்ப கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. கலந்தாய்வின் மூன்றாவது நாளான இன்று 284 இடங்களே மீதம் இருந்தது.

 

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்தாய்வில் கலந்துகொள்ள வந்தனர். அப்போது பிற்படுத்தப்பட்ட பகுதியினருக்கான கலந்தாய்வு நேற்றே முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.

 

 

இதையடுத்து மாணவிகள் அவர்கள் குடும்பத்தாருடன் திடீர் என அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

 

மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் மாணவிகள் தரப்பில் ‘அறிவியல் பாடம் படித்த தங்களுக்கு இடம் ஒதுக்காமல் தொழிற்கல்வி படித்த மாணவிகளுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது’ என்று புகார் கூறினர்.

இதற்கு விளக்கம் அளித்த செல்வராஜ், ”நேற்றே பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவுற்றதாகவும், இது குறித்து மாணவிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.அப்படி ஒரு குறுஞ்செய்தி வரவில்லை என்று மாணவிகள் தெரிவித்தனர்.

 

மேலும், 1993 INC விதியின் கீழ் தொழிற்சார் கல்வி பயின்ற மாணவிகளுக்கு 25% ஒதுக்கப்பட வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறோம்” என்று தெரிவித்தார். ஆனால்  அதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.முதலில் அறிவியல் பாடம்  மற்றும் நர்சிங் படித்தவர்களைதான் கவுன்சிலுக்கு அழைத்திருக்க வேண்டும் ஆனால் இவர்கள். தொழிற்சார் கல்வி பயின்றவர்களுக்குத்தான் முதல் உரிமை அளித்தார்கள் .தேர்வுக்குழு செயலாளர் அளித்த விளக்கம் மாணவிகள் சொல்வதற்கு நேர்மாறாக இருந்தது. வெளி ஊர்களிலிருந்து வந்து தங்கி செலவு செய்து வந்திருக்கிறோம்.ஆனால் இவர்கள் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையே குழி தோண்டி புதைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.என்று பெற்றோர்கள் புலம்பியபடி சென்றார்கள்.

 

அண்ணா சாலையில் மாணவிகள் மறியல் நடத்திய போது  பக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறையினர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவந்த மாணவிகளையும் பெற்றோர்களையும் அடிப்பதுபோல் மிரட்டி  விரட்டினர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top