முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

சென்னை:

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம் என சோதனை நடைபெறும் இடங்கள் நீண்டு கொண்டே போயின.

அ.தி.மு.கவின் இனொரு அணியான சசிகலாவின் உறவினர்கள் மட்டுமல்லாது முக்கிய ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. சுமார் 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.கவை சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோரின் வீடுகளில் எந்த ஒரு வருமான வரி சோதனையும் நடைபெற வில்லை. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இதைப்பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

பெரும்பாலான இடங்களில் படிப்படியாக சோதனை முடிவடைந்தாலும், ஜெயா டி.வி அலுவலகம், கிருஷ்ணபிரியா இல்லம், விவேக் இல்லம் என சில முக்கிய இடங்களில் ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்தது. இந்நிலையில், அனைத்து சோதனைகளும் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், திவாகரன் உள்ளிடோருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top