காற்று மாசு அடைவதை தடுக்க நீண்ட கால திட்டங்களை தயார் செய்யுங்கள்: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமான நிலையை அடைந்துள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. பனி மற்றும் மாசின் காரணமாகவே தெளிவான வானிலையின்மை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

காற்றுமாசு காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விமானங்கள், ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார் பகல் நேரங்களில் கூட எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசு நிலவுகிறது. இதனையடுத்து, காற்று மாசை குறைக்க மூன்று மாநில அரசுகளும் பல்வேறு நடவடைக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

மாசு காரணமாக டெல்லியில் கட்டுமான நடவடிக்கைகளுக்கும், அதிக மாசுக்களை உமிழும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் 14-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த லாரிகளும், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும் நகருக்குள் நுழைய தடை போடப்பட்டது. அத்துடன் குப்பைகளை எரிப்பதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காற்று மாசுபாடு குறித்து மத்திய அரசு, டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த பிரச்சனையை தடுக்க நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top