வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

 

பாளையங்கோட்டைச் சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்ட காவேரி பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த முகிலன் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் .

 

கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்டம், தாது மணல் கொள்ளை, கெயில் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நிலத்தடி நீர் பாதுகாப்பு  போராட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு என  தமிழ்நாட்டு வளங்களை கொள்ளை அடிக்கும் அல்லது மாசு படுத்தும் போராட்டங்களில் பங்கேற்றும் பல போராட்டங்களை முன் நின்று நடத்தியும்  வந்த சமூகப்போராளி முகிலன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தை பாளையங்கோட்டைச்  சிறைச்சாலையில் தொடங்கினார்.

 

அவர் வைத்த கோரிக்கைகளில் ஒன்று மக்கள் வழக்கறிஞர் செம்மணியை கைது செய்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது.

 

அந்த கோரிக்கை வெற்றிப்பெற்ற நிலையில் மற்ற கோரிக்கைக்காக தொடர்ந்து போரடவேண்டியதிருப்பதால் முகிலனின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள் நெல்லை மாவட்ட பொறுப்பாளர்களில் ஒருவரான ராஜேந்திரன் அவர்கள் மூலமாக உண்ணாநிலை போராட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார் .

 

அதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வைகோ அவர்களின் வேண்டுகோளை முகிலனின் வழக்கறிஞர்  நண்பர்கள் அப்துல் நிஜாம், அக்மல் கசாலி ஆகியோர் முகிலனிடம் தெரிவித்து, அவரது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர்.

 

இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோவின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை முகிலன் உண்ணாநிலை போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top