வக்கீல் செம்மணி தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’, டி.எஸ்.பி மாற்றம்

 

 

வக்கீல் தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்து இன்று டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.

 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மாறன்குளத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி. இவர் வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு வக்கீலாக ஆஜராகி வந்தார்.அந்த பகுதி எளிய மக்களுக்கு இலவசமாகவும் ஆஜராகி வந்தார்

இந்த நிலையில் வழக்கறிஞர்  செம்மணியை வேறொரு வழக்கு சம்பந்தமாக பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்லோஸ், ஏட்டுக்கள் செல்லத்துரை, சாகர் ஆகிய 5 பேரும் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கி கையை முறித்து செம்மணியை கடத்தி சென்றனர்

இதை கேள்விப்பட்டு ஊர் மக்களும்,அணுஉலை போரட்டக்குழுவை சார்ந்தவர்களும் பணகுடி ,ராதாபுரம் ,வள்ளியூர் காவல் நிலையங்களில் தேடியும் வழக்கறிஞர்  செம்மணியை கண்டுபிடிக்க முடியவில்லை

 

மறுநாள் உவரி காவல் நிலையத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவரை பார்த்தனர். செம்மணியை அத்துமீறி வீடுபுகுந்து அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் அதிகாலை நேரத்தில் அவரை இராதாபுரம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் ஒரு செருப்பைத் திணித்துவிட்டு, திரு. பழனி, திரு. விமல்குமார், திரு. ஜோஸ், திரு. முகமது சம்சில் உள்ளிட்ட ஏழு காவலர்கள் சுற்றிநின்று இரும்புத்தடியால் அடி அடியென்று அடித்துத் துவைத்திருக்கின்றனர். “நீ போடும் சத்தம் வள்ளியூர் டி.எஸ்.பி.க்கும், ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்சுக்கும் கேட்க வேண்டும்” என்று சொல்லிச் சொல்லி அடித்திருக்கிறார்கள்.

 

எந்தவிதமான மருத்துவ உதவியும் வழங்கப்படாது, சட்டையின்றி லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு, அரை நிர்வாண நிலையில் ஒரு மக்கள் வழக்கறிஞர் உள்ளே உட்கார்ந்திருந்தார். வழக்கறிஞர்  செம்மணியின் இடதுகால் பாதம் நடக்கமுடியாத அளவு வீங்கி ஊதிப் பெருத்திருந்தது. வடது கால் பெருவிரல் சிதைக்கப்பட்டு, நகம் கிழிக்கப்பட்டு, இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

 

மக்களுக்காக வாதாடும் ஒரு வழக்கறிஞருக்கு  இந்த நிலை என்றால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு இப்படிப்பட்ட காவல் நிலையங்களில் எப்படி நீதி கிடைக்கும். சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்ட இந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் முன்வாரத போது மக்கள் இயக்கங்களும் வழக்கறிஞர் சங்கமும் பத்திரிக்கயாளர்களும் நேற்று முன் தினம் போராட்டம் நடத்தினார்கள். இதனால் வக்கீல் செம்மணியை போலீசார் விடுவித்தனர்.

அப்போது வக்கீல் செம்மணி தன்னை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக கூறி பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்னும் காவல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும்,எம்ஜிஆர் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு  நெல்லை வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

 

உடனே மாவட்ட நிர்வாகம் தவறு செய்த கவல்துறை மீது நடவடிக்கை எடுக்க நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் விசாரணை நடத்தினர்.


இதைத்தொடர்ந்து பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்லோஸ், ஏட்டுக்கள் செல்லத்துரை, சாகர் ஆகிய 5 பேர் பாளை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

ஆனாலும் வக்கீல்கள் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடியதால் நேற்று வள்ளியூர் டி.எஸ்.பி. குமார் மாற்றப்பட்டு, புதிய டி.எஸ்.பி.யாக கனகராஜ் நியமிக்கப்பட்டார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் விசாரணை நடத்தி வருகிறார்

இதில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ்சை சஸ்பெண்டு செய்து இன்று டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார். மற்ற போலீசார் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top