நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசரில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு வசனம் வருகிறது.

இந்த வசனம் கமலை விமர்சிப்பது போல் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ‘கயல்’ பட நாயகன் சந்திரன் நேரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ‘உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என ட்வீட் செய்துள்ளார்.

தமிழநாட்டில் நடிகர்களை நம்பி ஓட்டுப்போட்டு காலம் எல்லாம் நாம் கடந்து விட்டதாகவும், இங்கு வேறு ஒரு மாற்றத்தை நோக்கி மக்கள் பையனித்து கொண்டு இருப்பதாகவும் சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவார் என சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வரும் நிலையில் இன்னும் சரியான முடிவை எடுக்கவில்லை. ஆனால், கமல் அரசியலுக்கு வருவதென நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

நேற்று தான் ஆர்.கே.நகர் டீசரும் வெளியானது. இதனால், சமூக வலைத்தளத்தில் இப்படத்தை பற்றி பலரும் பேசி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top