இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து

விஜய் சேதுபதியை நடிப்பில் `சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி, இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து `காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி.

`பீட்சா’, `சூது கவ்வும்’, `ஜிகர்தண்டா’, `எனக்குள் ஒருவன்’, `கட்டப்பாவ காணோம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இதுதவிர இவரது எழுத்தில் `மாயவன்’ படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் நலன் குமாரசாமி அவரது உறவு பெண்ணான சரண்யாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, பார்த்திபன், சாந்தனு, கருணாகரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top