இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

சென்னை

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அவரது உறவினரான டி.டி.வி.தினகரன் சசிகலா அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மன்னார்குடி பகுதியில் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடந்தது. இன்றும் 2 வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

மன்னார்குடியில் திவாகரன், தினகரன் வீடுகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 15 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை. திவாகரன் வீடு மற்றும் அவரது கல்லூரியில் இன்றும் சோதனை தொடர்கிறது.

வரித்துறையினர் சோதனை இன்றும் தொடரும் இடங்கள் :-

மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஒரு மணி நேரம் 45 நிமிடம் அங்கு சோதனை நடைபெற்றது. இதன்பின் கோடநாடு கிரீன் டீ எஸ்டேட் மற்றும் தேயிலை தோட்ட மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. சென்னை : ஜெயா டி.வி., டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகங்கள் மற்றும் கிருஷ்ணப்பிரியா விடு, தினகரன் ஜோதிடர் சந்திரசேகர் வீடு, லஷ்மி ஜூவல்லர்ஸ் கடை, ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள காகித ஆலை, திவாகரன் வீடு மற்றும் அவரது கல்லூரி, வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top