சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு மேலாக கொட்டித் தீர்த்த நிலையில், அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதேசமயம் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. இதன் காரணமாக முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

10ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top