தங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

ஹோ சி மின்ஹ்:

பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சி மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியாளர்களை துவம்சம் செய்து தொடர்ந்து முன்னேறினார்.

அரையிறுதி போட்டியில் ஜப்பானின் டிசுபாசா கோமுராவை வீழ்த்திய மேரி கோம், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியாங் மியை எதிர்கொண்டார். முதல் ரவுண்டில் இருந்தே இருவரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு முன்னிலை பெறும் முனைப்புடன் களமிறங்கினர்.

முதல் ரவுண்டில் மேரிகோமுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்த கிம் சுதாரிக்கத் தவறினார். அத்துடன் சில குத்துக்களையும் வாங்கியதால் சரிவு ஏற்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ரவுண்டுகளிலும் ஆக்ரோஷம் குறைந்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திய மேரி கோம் அடுத்தடுத்து தாக்க, 5-0 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் முதல் முறையாக ஆசிய போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக ஆசிய போட்டியில் அவர் 5-வது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top