இன்னும் 600 ஆண்டுகளில் பூமி தீப்பந்து போல் எரியும் – ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரிக்கை

பீஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் தோன்றிய இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகின்ஸ் பேசியதாவது:

உலகில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது மற்றும் அதற்கேற்றாற் போல் எரிபொருள் தேவையும் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2,600-ம் ஆண்டுகளில் இந்த பூமியே தீப்பந்துபோல எரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

எனவே இந்த பேரழிவிலிருந்து மனித இனத்தைக் காக்க வேண்டுமானால், வேறு கிரகத்திற்கு மனிதன் செல்ல வேண்டும். சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் நட்சத்திரங்களுக்கு மக்கள் குடிபெயரலாம்.

நம் சூரிய மண்டலத்திற்கு அருகில் உள்ள அல்பா சென்ட்டாரி என்ற நட்சத்திர மண்டலத்தை ஆராய லேசர்-இயக்கப்படும் நானோக்ராஃப்ட்டை அனுப்ப முயற்சிக்க வேண்டும்.

அல்பா சென்ட்டாரி என்ற நட்சத்திரம் சூரிய மண்டலத்திற்கு அருகே உள்ளது. 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களில் மக்கள் குடிபெயரலாம். அல்பா சென்ட்டாரியின் அருகில் புரோசிமா உள்ள சென்ட்டாரியில், புரோசிமா ப என்ற நட்சத்திரம் சாத்தியமான வசிப்பிடமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. பூமியைப் போன்று மக்கள் குடியிருக்க தகுந்த கிரகங்கள் இந்த நட்சத்திரத்திற்குள் இருக்கின்றன. இன்னும் 20 ஆண்டுகளில் ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் சிறிய விமானத்தின் மூலம் இந்த நட்சத்திர கிரகத்தை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top