டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த 187 நிறுவனங்களில் திடீரென வருமான வரித்துறை சோதனை!

 

 

டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள் சார்ந்த  187 இடங்களில் திடீரென வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.இது   தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம் உள்ளிட்ட 10 நிறுவனங்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் இன்று காலை 6 மணி முதல் ஆயிரக்கணக்கான வருமானவரித் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 

இந்தச் சோதனையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா தொலைக்காட்சி அலுவலகங்கள், நமது எம்ஜிஆர் பத்திரிகை, டிடிவி தினகரன், திவாகரன், விவேக், அவரது சகோதரர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுகசாமி அலுவலகங்கள் வீடுகள், காற்றாலை நிறுவனங்கள், சுரானா குழுமம், புதுவை லட்சுமி குரூப் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

 

தமிழகத்தில் டிடிவி தினகரன், சசிகலா, திவாகரன் இல்லம், மறைந்த மகாதேவன் இல்லம், விவேக் இல்லம், கிருஷ்ணபிரியா வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடக்கிறது. சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்களான மிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடக்கிறது.

 

தமிழகத்தில் டிடிவி தினகரன் வீடு – அடையாறு, விவேக் ஜெயராமன் இல்லம் – மகாலிங்கபுரம், கிருஷ்ணபிரியா வீடு – தி.நகர், ஜெயா தொலைக்காட்சி – ஈக்காட்டுத்தாங்கல், நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகம் – ஈக்காட்டுத்தாங்கல், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் – ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் – போயஸ் கார்டன், மிடாஸ் மதுபான ஆலை – படப்பை..

 

திருச்சி கே.கே.நகர் மங்கம்மாள் ராணி சாலையிலுள்ள சசிகலா சம்பந்தி கலியபெருமாள் வீடு, நீலகிரி மாவட்டம் கூடலூரிலுள்ள அதிமுக சசிகலா ஆதரவாளரும் மர வியாபாரியுமான சஜீவன் வீடு அலுவலகம் மற்றும் மர மில்கள்..

 

டிடிவி தினகரன் அணி புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயனுக்கு சொந்தமான அறந்தாங்கி அருகே உள்ள நெற்குப்பம் இல்லம் , திருச்சி ஐயப்பா நகர் அரசன் பேக்கரி அருகே உள்ள இல்லம்..

 

மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடு, தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியில் உள்ள டிடிவி தினகரன் மனைவி அனுராதா இல்லம். அருளானந்த நகரில் உள்ள டாக்டர் வெங்கடேஷ் வீடு,

தஞ்சையில் உள்ள சசிகலா கணவர் நடராஜன். சசிகலா அண்ணன் மகன் டி.வி.மகாதேவன், தினகரன் ஆதரவாளர்கள் ராஜேஸ்வரன் ஆகியோரின் வீடுகள், வழக்கறிஞர் வேலு.கார்த்திகேயன் வீடு, திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் வீடு, புதுக்கோட்டை காந்திநகரில் உள்ள சுந்தரவதன் வீடு.

 

திவாகரனின் நண்பர் சுஜய், செல்வம் வீடுகள், பெங்களூருவில் உள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் இல்லம். திவாகரனின் உதவியாளர் விநாயகத்தின் வீடு, வடுவூர் அக்ரி ராஜேந்திரன் வீடு, அம்மாபேரவை செயலாளர் ராஜேஷ்வரன் வீடு..

 

கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் – நாமக்கல் 2 நிறுவனங்கள், நாமக்கல் வழக்கறிஞர் செந்தில் வீடு, வணிகவளாகம், அலுவலகம், நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் அலுவலகம், பக்கத்தில் உள்ள கர்சன் எஸ்டேட். உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது.

 

இது தவிர மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுகசாமியின் கோவை அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடந்தது. இது தவிர நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வழக்கறிஞர் பாலுச்சாமி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

 

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு, ஹைதராபாத்தில் உள்ள சுரானா குழுமம் மற்றும் டெல்லியில் உள்ள சில நிறுவனங்கள் உட்பட 187 இடங்களில் இந்தச் சோதனை நடக்கிறது.

பெரும்பாலான இடங்களில் சோதனை டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள் சார்ந்த இடங்களில் நடப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top