பணமதிப்பு நீக்கம் கருப்பு தினமாக அனுசரித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

 

கடந்த வருடம்  நவம்பர் எட்டாம் தேதி இரவு பிரதமர் மோடி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதுவரை புழக்கத்தில் இருந்துவந்த ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று. திடீரென எடுத்த இந்த முடிவு இந்திய பொருளாதாரத்தை மிகவும் பாதித்தது மட்டுமல்லாமல், ஏழை ,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது.இன்றோடு ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியோ, மக்களின் வாழ்வாதார முன்னேற்றமோ ஏற்படவில்லை.ஆகையால், இந்த தினத்தை எதிர் கட்சிகள் நாட்டின் கருப்பு தினமாக அறிவித்து இந்தியா முழுவதும் ஆர்பாட்டம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் எதிர்கட்சியாக இருக்கும் திமுக  பண மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து. இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசை கண்டித்து இன்று (புதன்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பண மதிப்பு நீக்கம் தினம் ‘கருப்பு தினமாக’ அனுசரிக்கப்பட உள்ளது.

அதன்படி, மதுரையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

திருச்சியில் முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், திண்டுக்கல்லில் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, நாமக்கல்லில் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தலைமையிலும், திருப்பூரில் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையிலும், நெல்லையில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தலைமையிலும், கோவையில் கனிமொழி எம்.பி. தலைமையிலும், தஞ்சாவூரில் டி.ஆர்.பாலு தலைமையிலும், சேலத்தில் திருச்சி சிவா எம்.பி. தலைமையிலும், ஈரோட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மழை நிவாரண பணிகளில் தி.மு.க.வினர் ஈடுபடுவதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

 

திமுக தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது. மழையால் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைப்பது என திமுக முடிவு செய்திருக்கும் நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் சூளை தபால் நிலையம், பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகில் என 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top