கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் பெல்ஜியம் போலீசில் சரணடைந்தார்.

 

கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இன்று அவர்கள் பெல்ஜியம் போலீசில் சரணடைந்துள்ளனர்.

 

ஸ்பெயின் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணம் கேட்டலோனியா. இங்கு தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த மாதம் 1-ம் தேதி நடந்தது. இதில் கேட்டலோனியா தனிநாடாக பிரிந்து செல்வதற்கு 90 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது.

 

கேட்டலோனியா சுதந்திர பிரகடனம் செய்த சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, நேரடி நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. கலைக்கப்பட்ட கேட்டலோனியா பாராளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் மறு தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் உள்ளிட்ட 5 பேர் மீது ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாத பூட்ஜியமோண்ட் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

 

இந்நிலையில் கேட்டலோனியாவில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவருடைய ஆலோசகர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் பெல்ஜியம் போலீசில் சரணடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து அவர்களது வக்கீல்கள் கூறுகையில், சரணடைந்த அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளோம். விசாரணைக்கு பிறகே நீதிபதி அவர்களை சிறையில் அடைப்பது அல்லது விடுவிக்கப்படுவது குறித்து உத்தரவிடுவார் என்றனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top