ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்

 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார்.

 

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி வருகிறார்.

மிட்செல் ஸ்டார்க், வார்னர், ஸ்மித் போன்றோர் இடம் பிடித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் அணி, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் 270 ரன்கள் சேர்த்தது. வார்னர் 5 ரன்னகளில் ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ஸ்மித் சிறப்பாக வியைாடினார். அவர் 130 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார். வெஸ்டன் ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சட்ர்சன் 4 விக்கெட்டும், மற்றொரு வீரர் டேவிட் மூடி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் வெஸ்டன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. அந்த அணி 166 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. 67-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். இதன் 4-வது, 5-வது மற்றும் கடைசி பந்தில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் களத்திற்கு திரும்பி ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் நியூ சவுத் வேல்ஸ 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித்தின் சதத்தால் நியூ சவுத் வேல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சிலும் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசினார். முதல் இன்னிங்சில் ஹாட்ரிட் விக்கெட் வீழ்த்தியதுபோல் 2-வது இன்னிங்சிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் 76-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பெரன்டர்ஃப்-ஐ வீழ்த்தினார். 6-வது பந்தில் டேவிட் மூடியை க்ளீன் போல்டாக்கினார். 77-வது ஓவரின் முதல் பந்தில் ஜோனாதன் வேல்ஸ்-ஐ வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

வெஸ்டன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்து 171 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் ஹாட்ரிட் விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க், 2-வது இன்னிங்சிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் 1912-ல் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஜிம்மி மேத்யூஸ் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். தற்போது 105 ஆண்டுகள் கழித்து ஸ்டார்க் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் பிரிஸ்பேனில் வரும் 23-ந்தேதி தொடங்குகிறது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top