உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டது
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கே.கே. சுரேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்தார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. தாக்கல் செய்த வழக்குடன் இந்த வழக்கும் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை பணி முடிவடையும்: தமிழக அரசு பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் வரை இந்த பணி நடைபெறும். அதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.