ஹாலிவுட்டில் இருந்து ‘அவள்’ படத்திற்கு பாராட்டு

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்திருக்கும் படம் “அவள்”.

கடந்த 3-ஆம் தேதி வெளியாகிய ‘அவள்’ புதுமையான திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் பலமான திரைக்கதையே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது, இப்படத்திற்கு மேலும் பலம் கூடும் வகையில் அமைந்துள்ள ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

அந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட்டில் இருந்த பாராட்டு கிடைத்துள்ளதாக சித்தார்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலனுடன் பணிபுரிந்த தி கிரேட் ரிச்சர்டு கிங் ‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். சிறந்த தருணம். என்று கூறியிருக்கிறார்.

‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை விஜய ரத்னம், விஷ்ணு கோவிந்த் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top