எதற்கு பெயர் தீவிரவாதம்? பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்த – பிரகாஷ் ராஜ்

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்” என விமர்சித்தார். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இது பற்றி பேசிய போது எந்த வழக்கையும் எதிர் கொள்வேன், யாருக்கும் அஞ்ச மாட்டேன் தொடர்ந்து விமர்சிப்பேன் என பிரகாஷ்ராஜ் கூறினார்.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு ஆதரவாக தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்து உள்ளார். பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டரில் அதில் ”மதத்தின் பெயரில், கலாச்சாரத்தின் பெயரில் மக்களை பயமுறுத்தும் உங்கள் செயலுக்கு பெயர் தீவிரவாதம் இல்லை என்றால் எதற்கு பெயர் தீவிரவாதம்” என்று கேட்டு இருக்கிறார்.

 

— Prakash Raj (@prakashraaj) November 3, 2017

மேலும் அதில் ”மனிதர்களை மத ரீதியாக தாக்குவதும், பசு பாதுகாப்பிற்காக மனிதர்களை கொல்வதும், பெண்களை கலாச்சாரம் என்று கூறி தாக்குவதும் தீவிரவாதம் இல்லை என்றால் எது தீவிரவாதம்” என்ற வசனம் பொருந்திய புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார். இவர் உருவாக்கிய #justasking ஹேஸ்டேக் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top