24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகிறது

சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது, பின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிலா மழை பெய்யும் என்று அறிவிக்க பட்டது.

காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வட தமிழகத்தின் கரைப்பகுதிக்கு வந்தது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் 30 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.

காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து வட தமிழக கடலோர பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் மழைபெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தென்சீன கடலில் உருவாகி வியட்நாமில் கரையை கடந்த டெமிரி புயல் வலுவிழந்து மலாய் தீபகற்பம் வழியாக அந்தமான் கடலில் இணைந்தது. இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதியில் 7-ந்தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இதனால் 7-ந்தேதியும், 8-ந்தேதியும் அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top