மழை வெள்ளம் வடிய இடம் இல்லாததால் வெள்ளக்காடானது சென்னை

சென்னை,
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. பின் மழை சற்று தணிந்தது, பின் நேற்று மாலை மழை மீண்டும் பெய்ய தொடங்கியது. இரவு முதல் காலை வரை மழை கொட்டி தீர்த்தது தமிழக கடலோர பகுதியையே காட்டிலும் உல் தமிழக பகுதிகளில் காண மழை காணப்பட்டது. அதன்பிறகும் தூறிக்கொண்டே இருந்தது.
இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
மழை நீர் வடிவதற்கு வழி இல்லாமல் போனதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து சென்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், தண்ணீரில் தவறி விழுந்தும் 7 பேர் பலி ஆனார்கள். அது மட்டும் இன்றி அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் கைபட்டப்பட்டுள்ளது. இந்த காண மழை காரணமாக இதுவரை 9 பேர் உயிர் இழந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கிய தண்ணீர் நேற்று வடிய தொடங்கியது. சாலைகளில் தேங்கிய தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
என்றாலும் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியதால் தனி தீவாக காட்சியளிக்கிறது. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே வர முடியாததால் தவித்தனர்.
கூடுவாஞ்சேரி, ஆதனூர், மண்ணிவாக்கம் போன்ற பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் அடையாறு ஆற்றில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடையாறு ஆறு செல்லும் வரதராஜபுரம், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பீர்க்கன்காரணை, வண்டலூர் மலை, இரும்புலியூர் மேற்கு தாம்பரம் ஏரியில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் வழியாகவும், தாம்பரம் சிடிஓ காலனியை அடுத்துள்ள பாப்பான் கால்வாய் வழியாக கிஷ்கிந்தா சாலையில் உள்ள அடையாறு கால்வாய் வழியாக அடையாற்றில் வெளியேற வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ளம் செல்ல வழியில்லாமல் முடிச்சூர் சாலையில் ஆறாய் ஓடுகிறது.
 உள்ளாட்சி அமைப்புகள் குடியிருப்புப் பகுதியில் இருந்து மழைநீர் வெளியேற கால்வாய்கள் முறையாக அமைத்துள்ளனர். ஆனால் பொதுப்பணித் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் தங்கள் பணிகளை சரிவர செய்யவில்லை என சமூக ஆர்வலர் வெங்கடேசன் குற்றம் சாட்டினர்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top