வெற்றியை கொண்டாடும் ‘மெர்சல்’ படக்குழு

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது.

இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். படத்தில் மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம் (Demonitisation), டிஜிட்டல் இந்திய மற்றும் ஜி.எஸ்.டி குறித்து விமர்சித்து இருந்த சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் கிளம்பியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ரூ.130 கோடி செலவில் உருவாகிய இப்படம் தற்போது வரை ரூ.210 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதால், வசூல் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், நடிகர் விஜய் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு விருந்து ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள விஜய் வீட்டில் நடைபெற்ற இந்த விருந்தில், அட்லி, ஏ.ஆர்.ரஹஹ்மான், எஸ்.ஜே.சூர்யா, பாடலாசிரியர் விவேக், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top