உ.பி மத்திய அனல் மின்நிலையத்தில் விபத்து; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள மத்திய அனல் மின்நிலைய கொதிகலன் நேற்று மாலை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளன. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட மத்திய மின் துறை மந்திரி ஆர்.கே சிங், மனித தவறுகளால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவில்லை. விபத்து குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகின்றது என கூறினார்.

இதற்கிடையே, தேசிய அனல் மின்நிலைய ஆணையம் சார்பில் மாநில அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரகண்ட் ஆகியவற்றிற்கு இந்த 1,550 மெகா வாட் திறன் கொண்ட நிலக்கரியை எரிபொருளாக கொண்டு இயங்கும் அனல் மின்நிலையம் தான் மின்சாரம் வழங்கி வருகிறது.

என்டிபிசி சிஎம்டி, “நிர்வாக இயக்குனர் எஸ்.கே. ராய் விபத்திரக்கான காரணங்களை அறைந்து வருகிறார், ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top