`துருவ நட்சத்திரம்’ இத்தனை பாகங்களாக உருவாகிறதா?

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `துருவ நட்சத்திரம்’ படத்தில் பிசியாக உள்ளனர். அதேநேரத்தில் தாமதமாகியிருக்கும் தனுஷின் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு சுமார் 15 நாட்கள் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது.

இரண்டு படங்களையும் முடித்து விட்டு இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் `துருவ நட்சத்திரம்’ படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். தகவலின்படி புனித் ராஜ்குமார் மற்றும் அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அருண் விஜய்யின் 25-வது படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது அது இதுவாக இருக்க வாய்ப்புகள் உள்ளதா அல்லது புதிய படமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top