ஆஷிஷ் நெஹ்ரா விளையாடும் கடைசி போட்டி – ‘வாழ்த்துக்கள்’ கூறிய இந்திய அணியினர்

புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவுக்கு இது கடைசி சர்வதேச போட்டியாகும். 18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் தான் திறமையின் மூலம் நீடித்து, 38 வயதான நெஹரா சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விடைபெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் வாழ்த்து கூறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக், அஜிங்கியா ரகானே, ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஷிஷ் நெஹ்ராவுடன் நடந்த இனிப்பான விஷயங்கள் குறித்து கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top