பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

அகமதாபாத்:

குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார்.

3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று குஜராத் மாநிலம் சென்றார். ஜமு‌ஷர், பரூச் உள்ளிட்ட பல பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியையும், நிதி மந்திரி அருண் ஜெட்லியையும் கடுமையாக தாக்கி பேசினார். தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மோடியின் குஜராத் மாதிரி தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த அரசு விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டது. குஜராத்தில் உள்ள பெரிய தொழில் அதிகாரிகள் தான் மோடியால் பலன் அடைந்தனர். அவர்கள்தான் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை.

குஜராத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் அவர்களை இந்த அரசு புறக்கணிக்கிறது. இதற்கு தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர். இதனால் இந்தியாவில் வியாபாரத்தில் ஈடுபடுவது மிகவும் கடினமானது. வியாபாரம் செய்வது எளிதானது அல்ல.

மோடி அரசு மீது பட்டேல் சமூகத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களது எழுச்சி இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top