சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

 

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி [67.] சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் இன்று காலை காலமானார்.

 

.விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த பொன்னுசாமி மிக மிகச் சாதாரண மக்களின் வாழ்க்கையை, உழைக்கும் மக்களது வாழ்கை சிக்கலை  தனது படைப்புகளில் கொண்டுவந்தவர்.

 

ஒரு எளிய ஏழை குடும்பத்தில் பிறந்த பொன்னுசாமி வறுமையின் பிடியில் இளமை காலத்தை கழித்தவர். குடும்பத்தின் வறுமை அவரை ஆரம்பப் பள்ளியைத் தாண்ட முடியாத நிலைக்கு தள்ளியது . பள்ளிக் கல்வியிலிருந்து விடுபட்டாலும் இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அனுபவங்களும் அவரை எழுத்தாளராக்கின.

 

‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.

 

நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் என புனைகதை இலக்கியம் சார்ந்து 36 நூல்களை எழுதியுள்ளார்.

நாளை காலை சென்னையில்  அவரது இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top