இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

 

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அங்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

 

இன்று நாம் இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினால், நாம் துரோகிகள், தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம். எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? நாங்கள் உங்களை (இந்தியாவை) அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நீங்கள் அதை புரிந்துகொள்ளாமல், நாங்கள் பெற்றிருப்பதை எல்லாம் பறிக்கிறீர்கள். பின்னர் எங்களை ஏன் தழுவ மறுக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.

 

மக்களின் இதயங்களை வெற்றிகொள்ள முயற்சிக்கும் வரை ஜம்மு, காஷ்மீர், லடாக் உங்களை தழுவாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எங்கள் இதயங்களை வெற்றிகொள்ள வேண்டுமானால், எங்கள் சுயாட்சியை எங்களிடம் திருப்பித்தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top