சபரிமலை வழக்கை பெண் நீதிபதிகள் விசாரிக்க கோரிக்கை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கோரும் விவகாரத்தை விசாரிக்க, பெண் நீதிபதிகள் பாதி பேர் இடம்பெற்றிருக்கும் அமர்வை அமைக்கக்  கோரி  உச்ச  நீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை கேரளத்தைச் சேர்ந்த எஸ்.பரமேஸ்வரன் நம்பூதிரி என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிக்கக் கோரிய மனுவை, அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்காக உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சில விஷயங்களை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. மேற்குறிப்பிட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரமானது முழுக்க முழுக்க பெண்களுடன் தொடர்புடையதாகும். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை பெண்களால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. எனவே, இந்த மனுவை விசாரிப்பதற்காக பெண் நீதிபதிகள் பாதி பேர் இடம்பெற்றிருக்கும் வகையிலான அமர்வை உச்ச நீதிமன்றம் அமைக்க வேண்டும். இல்லையெனில், சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களைக் கொண்ட நடுவர் குழுவை அமைக்க வேண்டும். இந்த நடுவர் குழுவில் எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் இடம்பெற்றிருக்கச் செய்ய வேண்டும். மேலும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண குறிப்பிட்ட காலக்கெடுவையும் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதனை அரசியல் சாசன அமர்வுக்கு அண்மையில் பரிந்துரைத்திருந்தது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. The consideration of such problem can affect the attitude of women towards the justice. We should contact the specialists http://essaycorrector.org/ to get some help with writing questions.

Your email address will not be published.

Scroll To Top